நடிகர் சத்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி!

 
sathyaraj

கொரோனா பரவலின் மூன்றாவது அலை இந்தியாவில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று முதல் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

Don't cast me if you fear backlash: Sathyaraj hits back - DTNext.in

இதனிடையே தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டி பதிவாகிவருகிறது. மூன்றாம் அலை பரவலாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரிவோருக்கும் கொரோனா தொற்று பதிவாகிவருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. இந்த நிலையில், பாடகர் சோனு நிகாம், நடிகர் மகேஷ் பாபு இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் சத்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர், அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.