மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான டி.ராமராவ் காலமானார்!!

 
tn

 மூத்த தயாரிப்பாளரும்,  இயக்குநருமான டி ராமராவ் காலமானார். அவருக்கு வயது 83.

தெலுங்கு மற்றும் இந்தியில் 70 படங்களை இயக்கியவரும், தமிழில் வெற்றி படங்களைத் தயாரித்தவருமான மூத்த இயக்குநர்-தயாரிப்பாளர் டி ராமாராவ் இன்று சென்னையில் உயிரிழந்தார். 

tn

ராமராவ் என்டிஆர், ஏஎன்ஆர், ஷோபன் பாபு, கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, ஜெயசுதா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியவரான ராமாராவ் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை வைத்து திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். குறிப்பாக  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அந்த கானூன் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. 

tn

அத்துடன் இன்றைய தலைமுறையினருடன் ஸ்ரீ லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் பேனரின் மூலம் தமிழ் படங்களை தயாரித்த இவர், விக்ரம், விஜய், ஜெயம் ரவி, விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடனும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக . தில், யூத், அருள், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், மலைக்கோட்டை போன்ற படங்கள் இவரது தயாரிப்பில் உருவானது தான்.

tn

மறைந்த இயக்குனர் ராமராவிற்கு தாதினேனி ஜெயஸ்ரீ என்ற மனைவியும், சாமுண்டீஸ்வரி, நாக சுசீலா, என்ற மகள்களும், அஜய் என்ற மகனும்  உள்ளனர்.  தி.நகர் பாலாஜி அவென்யூ முதல் தெருவில் உள்ள இல்லத்தில் ராமராவ்  உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 4 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில்  இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.