விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார்- சரத்குமார்

 
vijay vijay

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். 

Image

இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம், தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், “விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று சூர்ய வம்சம் படத்தின் 175 வது நாள் விழாவில் நான் சொன்னேன். அது தற்போது நடந்துவிட்டது. விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார். நான் அப்போது இதை சொன்னபோது கலைஞர் கருணாநிதி கூட ஆச்சர்யப்பட்டார். நீயே ஹிட் படம் கொடுத்திருக்க, நீ ஏன் அப்படி சொன்ன என என்னிடம் கலைஞர் கேட்டார். ஆனால் அது ஒன்று நிஜமாகியுள்ளது” என தெரிவித்தார்.