நிர்வாண புகைப்பட விவகாரம் - நடிகர் ரன்வீர் சிங் மீது போலீசில் புகார்

 
ranveers-ignh-33

நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நடிகர் ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

நடிகர் ரன்வீர் சிங் பாலிவுட்டின் மிகப் பிரபலமான நடிகர். மேலும் நடிகை தீபிகா படுகோனேவின் கணவரும் கூட. ரன்வீர் சிங் எப்போதும் அதிக எனர்ஜியுடன் காணப்படுவர். அதே போல பொதுவெளியில் வரும்போது அவருடைய வித்தியாசமான கெட்டப் மற்றும் காஸ்டியூம்கள் எல்லாம் மிகவும் வித்தியசானமானதாக புதுமையாக இருக்கும். அதன் மூலமே அவருக்கு பல ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் தனக்கு பிடித்ததை செய்யக் கூடியவர் அவர். இந்நிலையில் ரன்வீர் சிங் ஆடை இல்லாமல் நிர்வாணமாகக் காணப்படும்  போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகின்றன. ‘

Ranveer

இதனிடையே விமர்சனங்களுக்கு பதில் அளித்த ரன்வீர் சிங் எல்லோர் ம்முன்னிலையிலும் நிர்வாணப் படங்களுக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் கடினம் அல்ல இந்த புகைப்படங்களில் எனது ஆன்மாவை பார்க்க முடியும், ஆயிரக்கணக்கான மக்களுடன் கூட நிர்வாணமாக இருக்க முடியும். ஆனால் சங்கடப்பட்டால் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள செம்பூர் காவல் நிலையத்தில் ரன்வீர் சிங் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பெண்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், பெண்களின் நாகரீகத்தை அவமதிக்கும் வகையிலும் அந்த புகைப்படங்கள் இருப்பதால் ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. இந்த புகார் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன்பின் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.