'பதான்' படக்குழுவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து

 
tn

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பதான்  திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. 

pathaan

இயக்குனர் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் ,ஜான் ஆபிரகாம் , டிம்பிள் கபாடியா நடித்துள்ள திரைப்படம் பதான். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இப்படம் வருகிற 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. யாஷ்  தயாரிப்பு நிறுவனத்தின் 50 வது படமாக இப்படம் உருவாகியுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.இந்நிலையில் நடிகர் விஜய் , ஷாருக்கான் மற்றும் பதான் பட குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஷாருக்கானுடன் காவி உடை அணிந்தவாறு தீபிகா படுகோன் நடனமாடும் காட்சிகள் பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் பதன் படத்தை திரையிட விட மாட்டோம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.