6 லிருந்து 60 வரை.. 6 தசாப்தங்களாக திரையுலகில் ஜொலிக்கும் ஜாம்பவான்..

 
kamal-haasan-344

ஆறு வயதில் நடிப்புத் துறையில் கால் பதித்த கமல்ஹாசன் 62 ஆண்டுகளாக தனது கலை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.. கலைத்தாய் பெற்றெடுத்த கலைஞன் என்று போற்றப்படும் கமல்ஹாசன் இன்று  தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்..

1957 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள  பரமக்குடியில் பிறந்தவர் கமல்ஹாசன். ஸ்ரீனிவாசன்- ராஜலட்சுமி தம்பதியின் நான்கு குழந்தைகளில் கடைக்குட்டியாக பிறந்தவர் கமல். இளம் வயதிலிருந்து படிப்பு தவிர , பிற கலைகளில்  மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார் . சாருஹாசன்,  சந்திரஹாசன் மற்றும் நளினி ஆகியோர் இவரது உடன் பிறந்தவர்கள் .. மிகுந்த கட்டுப்பாடு கொண்டவராக இருந்து கமல்ஹாசனின் தந்தை,  தனது பிள்ளைகளையும் நன்கு படிக்க வைக்க எண்ணினார்.  அதன்படியே கமலின் சகோதரர்கள் இருவரும் சட்டம் பயின்றனர்.

6 லிருந்து 60 வரை.. 6 தசாப்தங்களாக திரையுலகில் ஜொலிக்கும் ஜாம்பவான்..

ஆனால் கமல்ஹாசனோ தனது 6 வயதில்,  அதாவது 1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இன்றளவும் அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' பாடல் கேட்கும் அனைவருக்கும் கமல்ஹாசனின் பிஞ்சு முகம் தான் நினைவுக்கு வரும். அந்தப் பிஞ்சு  வயதிலேயே தேசிய விருதையும் பெற்று  சாதனை படைக்கட்டில் ஏறத்தொடங்கிவிட்டார்.  தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்து வந்த கமல்ஹாசனுக்கு திருப்புமுனையாக அமைந்தது கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அரங்கேற்றம்’ திரைப்படம் தான்.  கமல் டீன் ஏஜ் இளைஞனாக நடித்த முதல் திரைப்படம் அதுவே..

kamal and rajini

தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த கமல்ஹாசன் 1974 இல் வெளியான ‘கன்னியாகுமரி’ எனும் மலையாள படம் மூலமாகவே கதாநாயகனாக உருவெடுத்தார்.. பின்னர் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழில் கதாநாயகனார்.  இந்த படத்திற்கு ஃபிலிம் ஃபேர் மற்றும் தேசிய விருதுகளும் கமலுக்கு கிடைத்தது..   இன்று திரையுலக ஜாம்பவான்களாக இருந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும்,  உலக நாயகன் கமல்ஹாசனும் ஆரம்ப காலத்தில் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 1970களில் ‘16 வயதினிலே’,‘அபூர்வ ராகங்கள்’, அவர்கள்,  இளமை ஊஞ்சலாடுகிறது, உருவங்கள் மாறலாம் , அலாவுதீனும் அற்புத விளக்கும்,  நினைத்தாலே இனிக்கும், அவள் அப்படித்தான் , ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்தனர்..

vijay with kamal

அதே சமயத்தில் ஹிந்தி திரை உலகிலும் கவனம் செலுத்தி வந்த கமல்,  ஏக் துஜே கே லியே,  சாகர் , ராஜ் திலக்,  கிராஃப்ட் ஆகிய படங்களிலும் நடித்து வந்தார்.   1978ல் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்ட கமல்ஹாசன் 10 ஆண்டுகள் கழித்து அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு  ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.  பின்னர் 2002ல் அந்த  உறவிலிருந்தும் வெளியேறிய கமல்ஹாசன்,  2005 ஆம் ஆண்டு முதல் நடிகை கௌதமியுடன் இணைந்து வாழ்ந்து வந்தார்.  பின்னர் அவருடனான உறவும் முறிந்து விட்டது.

kamal

கிடைத்த வாய்ப்புகளை நான்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் பெற்ற கமல் நடிப்பு,  நடனம்,  சண்டை என அனைத்திலும் புதிய ஸ்டைல்களை அறிமுகம் செய்து 70களில் தொடங்கி  தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பின்னர் 80கள், 90கள், 2000, 2010, 2020 என 6  தசாப்தங்களை கடந்து இன்றும் திரையுலகில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.  இந்த 62 கால திரையுலka  பயணத்தில் கமல் நிகழ்த்திய சாதனைகள் எத்தனையோ.. இயன்றவரை நாட் அவுட் ஆகாத கர்ஜிக்கும் சிங்கம் போல் களத்தில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..