குணச்சித்திர நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்
Fri, 29 Apr 20221651245045000

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி அஜித், விஜய் வரை ஏராளமான நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தவர் ரங்கம்மா பாட்டி. இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடியான..’இந்தா அந்த நாய கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ’என்ற டயலாக் மிகவும் பிரபலமானது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ளது தெலுங்குபாளையம் இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கம்மாள் பாட்டி. தமிழ் சினிமாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் நடித்து பிரபலமான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல குறைபாடு ஏற்பட்டது. வறுமையின் பிடியில் சிக்கி ஒரு வேலை உணவுக்கு கையெந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், குணச்சித்திர நடிகை ரங்கம்மா பாட்டி இன்று உடல்நலக் குறைவால் அன்னூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.