95வது ஆஸ்கர் விருது விழா: விருதுகளை குவிக்கும் படங்கள்.. ஆஸ்கர் மேடையில் ஒலித்த ‘நாட்டு நாட்டு’ பாடல்..

 
Oscars

 

திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கியது.  சிறந்த பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வெல்லுமா? என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  

திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த விழாவினை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார்.

இதில் , சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோ’திரைப்படம் தட்டிச் சென்றது.  

‘Everything All At Once' படத்தில் நடித்த கி ஹு ஹுவான் சிறந்த துணை நடிகர் பிரிவிலும், ஜேமி லீ கர்டிஸ் சிறந்த துணை நடிகை பிரிவிலும் ஆஸ்கர் விருதினை வென்றனர்!

jai bhim movie Oscar

சிறந்த அவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘நவால்னி’ ஆவணப்படம் வென்றது.  அதேநேரம் ஆவணப்படம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவணப்படமான‘All That Breathes'-க்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.  


சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம் பிரிவு ஆஸ்கர் விருதை ‘The Whale' படம் வென்றது. ஆட்ரியன் மோரோட், ஜூட் சின் மற்றும் அன்னிமேரி பிராட்லி ஆகியோர் ஆஸ்கர் விருதினை பெற்றுக்கொண்டனர்.   

இந்நிலையில் சிறந்த பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வெல்லுமா? என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.  ஆனால், ஆஸ்கர் விழா மேடையில்  ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ கால பைரவா , ராகுல் சிப்ளிகஞ்ச் ஆகியோர் பாடினர்.  பாடலில் இடம்பெற்றிருந்த  பிரபல ஸ்டெப்களை  நடன  கலைஞர்கள் நடனமாடி அரங்கில் இருந்தவர்களை குஷிபடுத்தினார்கள். இந்த பகுதியை இந்திய நடிகை தீபிகா படுகோன் அறிமுகம் செய்து வைத்தார்.  

 


இந்த ‘நாட்டு நாட்டு’ நடன அரங்கேறத்திற்கு ஆஸ்கர் அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.  முன்னதாக  ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் தொடக்க உரையில் ‘ஆர்.ஆர்.ஆர்' படத்தை பாலிவுட் திரைப்படம் என விழாவின் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் குறிப்பிட்டார்.  

சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் இந்தியாவின் ‘The Elephant Whisperers'ஆஸ்கர் விருதை வென்றது. தமிழ் ஆவண குறும்படமான இந்தப்படத்திற்கு அறிவிக்கப்பட்ட விருதை இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர்.

Oscars

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை   Black Panther: Wakanda Forever திரைப்படம்  வென்றிருக்கிறது. இந்த விருதினை ஆடை வடிவமைப்பாளர் ரூத் கார்டர் வென்றார்.  

OSCARS

மேலும், All Quiet on the Western Front படம்  சிறந்த பின்னணி இசை, சிறந்த சர்வதேச படம் என  ஆஸ்கர் விருதுகளை குவித்து வருகிறது.  இந்தப்படத்தில்  சிறந்த பின்னணி  இசைக்கான விருதை  வேல்கர் பெர்டில்மேன், சிறந்த சர்வதேச படத்திற்கான விருதை எட்வர்ட் பெர்கர் வென்றனர்.

சிறந்த Visual Effects பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ படம்.  ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பேன்ஹன், எரின் சேண்டன், டேனியல் பேரட் ஆகியோர் ஆஸ்கர் விடுதினை பெற்றுக்கொண்டனர்.. 

OSCARS