அம்பி – ஆரி; ரொமோ – பாலா… அப்ப, அந்நியன் யாரு? பிக்பாஸ் 84-ம் நாள்

 

அம்பி – ஆரி; ரொமோ – பாலா… அப்ப, அந்நியன் யாரு? பிக்பாஸ் 84-ம் நாள்

எவிக்‌ஷன் நடைபெறும் நாள் என்பதால் நேற்றைய எப்பிசோட் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்க்கப்பட்டது. ஏனெனில், போட்டியாளர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள். அதனால், யார் வெளியேறுவார்கள் என்பது பெரும் குழப்பமாக இருந்தது. ஆயினும், ஒரு நாள் முன்பே செய்தி வெளியே கசிந்தபடிதான் எவிஷனும் இருந்தது. ஆயினும் சின்னச் சின்ன சுவாரஸ்யங்களும் இருந்தன.

கமல் வருகை

அம்பி – ஆரி; ரொமோ – பாலா… அப்ப, அந்நியன் யாரு? பிக்பாஸ் 84-ம் நாள்

வழக்கமான உற்சாகத்தோடு நிகழ்ச்சிக்கு வந்தார் கமல். தொடக்கத்திலேயே பந்து பிடிக்கும் போட்டியில் நடந்த குளறுபடிகள்… அணி பிரிக்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து விசாரனையைத் தொடங்கினார். முதலில் தொடங்கியது கேபியிடமிருந்து. ‘ஏன் பாலா பிரித்த அணியில் சேர மாட்டேன் என்றீர்கள்?’ என்ற கமலிடம், ‘டீம் பிரிக்கையிலேயே ஸ்டேட்டர்ஜியை பாலா ஆரம்பித்துகிறார். பலமான ஆட்களை அவர் அணியிலும், மற்றோர் அணியில் பலம் குறைந்தவர்களையும் தேர்வு செய்கிறார். மேலும். சோம் மற்றும் ரியோ டீமில் நான் இருக்கக்கூடாது என நினைக்கிறார் என்று காரணங்களைச் சொன்னார். இது இயல்பாக எங்குமே நடக்கும் ஒன்றுதான்.

பாலாவின் உயரம், உடல் பருமன் ஆகியவற்றால் அவர் இயல்பாக இருந்தாலும், அது பின்னிருந்து விளையாடுபவர்களுக்கு இடையூறு என்பதைச் சுட்டிக்காட்டினார். இதுவே அர்ச்சனா அண்ட் கோ விலிருந்து ஓர் ஆள் எனில், கமல் இடித்து சொல்லியிருப்பார். பாலா மீது சாஃப்ட் கார்னர் பிக்பாஸ் டீம்க்கே இருக்கிறது.

அம்பி – ஆரி; ரொமோ – பாலா… அப்ப, அந்நியன் யாரு? பிக்பாஸ் 84-ம் நாள்

காலர் ஆஃப் வீக்கில் கோவையிலிருந்து ரமேஷ் என்பவர் பேசினார். முதலில் கமலுக்கு சலாம் வைத்து, சில புகழுரைகளை முடித்துவிட்டு ஆரியிடம் அந்தப் புகழ்பெற்ற கேள்வியைக் கேட்டார். ‘பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் இயல்பான மனிதர்களாக இருக்கையில் நீங்கள் மட்டும் ஏன் அம்பி மாதிரி இருக்கீங்க?’ என்றார். அதற்கும் ஒரு விளக்கம் சொல்லி, அசர (!) வைத்தார் ஆரி.

ஜெயம் ரவியின் வருகை பிக்பாஸ் வீட்டினருக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஏனெனில், 80 நாட்களாக ஓரிருவர்களைத் தவிர புதிய முகங்களை அவர்கள் திரையில்கூட சந்திக்க வில்லை. கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடியவர்கள்கூட கண்ணாடி தடுப்புக்கு அந்தப் பக்கத்திலிருந்தே பாடினார்கள்.

அம்பி – ஆரி; ரொமோ – பாலா… அப்ப, அந்நியன் யாரு? பிக்பாஸ் 84-ம் நாள்

தான் நடித்த ‘பூமி’ படத்தின் டிரைலரை அங்கே வெளியிட்டார் ஜெயம் ரவி. ஹாட்ஸ்டார் வெளியீடாம். ஓ! விளம்பரதாரர் நிகழ்ச்சிதானா? வழக்கம்போக கமலைப் புகழ்ந்து பேசித் தொடங்கினார் ஜெயம் ரவி. ஆளவந்தான் படத்தில் ஜெயம் ரவி உதவி இயக்குநராக வேலை பார்த்தாராம். ஆனால், அது கமலுக்கே தெரியாதாம். அதனால், இங்கே எவிக்‌ஷனிலிருந்து காப்பாற்றப்படுபவர் யார் என்று அறிவிக்கச் சொல்லும் வாய்ப்பைக் (!) கொடுத்தார் கமல்.

கேபி மற்றும் ஷிவானி காப்பாற்றப்பட்டனர். அதற்கு முன்பிருந்தே ’நான்தான் வெளியே போக போறேன்’ என்று தொடர்ந்து அணத்திக்கொண்டிருந்தார். நமக்குக் காட்டியதே ஆறேழு முறைகள் இருக்கும். அப்படியெனில், நிஜமாக எத்தனை முறையோ, பிக்கி ரொம்பவே பாவம்தான்.

அம்பி – ஆரி; ரொமோ – பாலா… அப்ப, அந்நியன் யாரு? பிக்பாஸ் 84-ம் நாள்

எப்போ பார்த்தாலும் கடைசியாக காப்பாற்றப்படுகிறோம் என்று ரொம்ப நொந்து கொண்டு, கோபப்பட்டார் ஆஜித். கண்ணா, நீங்க இவ்வளவு நாள் இருக்கிறதே பெரிய விஷயம்தான். நியூ இயர்க்கு இங்க இருக்கணும்போல இருக்கு என கெஞ்சி விட்டு இப்படி கோபப்படுவது நியாயமா?

ஆகக் கடைசியாக, பலரும் எதிர்பார்த்தது நடந்தே விட்டது. அனிதா எவிக்ட் செய்யப்பட்டார். ஷனம் வெளியேற்றப்பட்ட வாரத்திலிருந்தே இதை எதிர்பார்த்ததால், அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய வில்லை. அவருக்காக அழ வீட்டுக்குள்ளும் யாருமில்லை.

அனிதாவின் எவிக்‌ஷனுக்கு இரு காரணங்கள்தாம். தம் தவறுகளை ஏற்றுக்கொள்ளவே மறுக்கும் அவரின் அடிப்படை குணம். இரண்டு, அந்தக் குணத்தால் உதவ நினைக்கும் அல்லது நட்பாகப் பழக நினைக்கும் மனிதர்கள் விலகிச் சென்றுவிடுகிறார்கள். மூன்றாவது காரணமும் இருக்கிறது. அது, இந்த வாரம் ஆரியோடு சண்டை போட்டது. ஆரியின் ரசிகர்கள் ப்ளான் பண்ணி ஷிவானிக்கும் ஆஜித்க்கும் ஓட்டுப்போட்டு காப்பாற்றி விட்டார்கள். மறைமுகமாக அனிதாவை வெளியேற்றி விட்டார்கள்.

அம்பி – ஆரி; ரொமோ – பாலா… அப்ப, அந்நியன் யாரு? பிக்பாஸ் 84-ம் நாள்

உண்டியலைப் பார்க்கையில் கணவரின் நினைவு வருகிறது என்பதால் உடைக்க மாட்டேன் என்றார் அனிதா. ஆனால், விடாமல் உடைக்க வைத்தார் பிக்கி. பாலா லேசாக மேல்பக்கமாக உடைத்தார். அதுக்கே கண்களிலிருந்து நீர் வழிய அதிர்ந்தார்.

வெளியே கமலிடம் பேசும்போது, ‘தம்பி, தங்கைஸ்க்கு அட்வைஸ் பண்ணியதை இன்று டிவியிலிருந்து பார்க்கும்போது என்ன நினைப்பார் என்று புரியவில்லை. ஏனெனில், சோஷியல் மீடியாவில் அவரை ஓட்டித் தள்ளியிருக்கிறார்கள்.

அம்பி – ஆரி; ரொமோ – பாலா… அப்ப, அந்நியன் யாரு? பிக்பாஸ் 84-ம் நாள்

அனிதா வெளியே சென்றதும், ரம்யா, ஆரி உரையாடலில் ‘அனிதா என்ன செய்தார் தெரியுமா?’ என்று ஆரி விளக்க, ‘வெளியே போனவங்களைப் பற்றி பேச வேண்டாமே’ என்று நாகரிகம் காத்தார் ரம்யா. அதன்பின், ஆஜித், பாலா, ரம்யா மூவருக்குமான உரையாடலில் ஆரி டோட்டல் டேமேஜ். ‘அம்பின்னு நினைச்சிட்டுத்தான் ஒவ்வொரு வாரமும் காப்பாற்றிட்டு இருந்திருக்காங்க போல’ என பாலா ஆரம்பிக்க, ‘ஆரி அம்பி, நீங்க ரொமோ’ என்று ரம்யா கலாய்க்க, ‘இல்ல.. இல்ல.. நான் அந்நியன்’ என்றார் பாலா. ‘முடியாது. நான் தான் அந்நியன்’ என அந்நியனுக்கு ஒரு சண்டை போட்டுட்டு இருந்தாங்க.

ரியோ அண்ட் குரூப் தனியே போய் உலாத்திட்டு இருந்தாங்க. கேபி எஸ்கேப் ஆனதில் பெரிதாகச் சந்தோஷப் பட முடியவில்லை. ஏனெனில், அடுத்த வாரத்தில் போய்விடும் ஆபத்து இருக்கிறது. லைட்ஸ் ஆஃப் செய்தபின்பும் ஆரி, அடுத்த வார குருப் பிரிப்பை தீவிரமாகச் செய்துகொண்டிருந்தார்.