அந்த ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை – அதிர்வினை ஏற்படுத்தும் நடிகை

 

அந்த ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை – அதிர்வினை  ஏற்படுத்தும் நடிகை

ஆசிரியர் ராஜகோபாலனின் அட்டூழியங்கள் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அடையாறு இந்து பள்ளி ஆசிரியர்களின் அட்டூழியங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அதிர்வினை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகை கவுரி கிஷன்.

அந்த ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை – அதிர்வினை  ஏற்படுத்தும் நடிகை

பத்மா சேஷாத்ரி பால பவன்(பி.எஸ்.பி.பி. ) பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் பாடம் நடத்தியதாகவும், மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இரவிலும் மாணவிகளுக்கு போன் போட்டு ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்ததாகவும் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோவில் ஐந்து பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

பள்ளி நிர்வாகமும் அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. ஆனால், இந்த தண்டனை எல்லாம் போதாது என்றும், ஆசிரியர் பணி தொடர முடியாதவாறு தண்டனை இருக்க வேண்டும் என்று ம் திரைப்பட இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

அந்த ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை – அதிர்வினை  ஏற்படுத்தும் நடிகை

இந்நிலையில், அடையாறு இந்து ஸ்கூலில் படித்த நடிகை கவுரி கிஷன், பி.எஸ்.பி.பி. பள்ளி மாணவிகள் அனுபவித்தது போலவே, தானும் சக மாணவிகளும் அனுபவித்ததாக சொல்லி அதிர வைத்திருக்கிறார். படிக்கும் காலத்தில் இதை மனவலியுடன் பொறுத்துக்கொண்டதாகவும், தற்போது பிஎஸ்பிபி மாணவிகள் துணிச்சலாக வெளியே சொல்லி இருப்பதால் தானும் துணிச்சலாக சொல்லி இருப்பதாகவும் , இதனால் மனபாரம் இறங்கியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

விஜய்சேதுபதி நடித்த ‘96’படத்தில் சின்ன வயசு த்ரிஷா கேரக்டரில் நடித்து அசத்தியவர் கௌரி கிஷன். விஜய் நடித்த மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் ராஜகோபாலன் விவகாரத்தை கேள்விப்பட்டதும், தான் படித்த காலத்தில் அடையாறு இந்து சீனியர் செகண்ட்ரி பள்ளியில் நடந்ததை துணிச்சலாக சொல்லி இருக்கிறார்.

அந்த ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை – அதிர்வினை  ஏற்படுத்தும் நடிகை

அவர், ’’என்னைப்போல பல மாணவிகள் பட்ட கஷ்டத்தை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. அடையாறு இந்து சீனியர் செகண்ட்ரி பள்ளியில் அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, பாடி லாங்வேஜ்ஜை வைத்து கிண்டல் செய்வது , மாணவ -மாணவிகள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்துவது என்று எத்தனை எத்தனை கொடுமைகள்.

வெளியே சொல்ல தைரியமின்றி அத்தனையையும் பொறுத்துக்கொண்டோம். எங்களை இந்த அளவுக்கு கஷ்டப்படுத்திய ஆசிரியர்களின் பெயர்களை நான் சொல்ல விரும்பவில்லை.
பிஎஸ்பிபி மாணவிகளின் துணிச்சலுக்கு பிறகு நானும் இதையாவது சொல்ல முன் வந்திருக்கிறேன். அதனால் இத்தனை ஆண்டுகளாக என் நெஞ்சில் இருந்த பாரம் இறங்கியிருப்பதாக உணர்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.

அந்த ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை – அதிர்வினை  ஏற்படுத்தும் நடிகை

மேலும், ’’நான் மட்டுமல்ல; அந்த கஷ்டங்களை அனுபவித்த அத்தனை மாணவிகளுக்காகவும் நான் வருத்தப்படுகிறேன். என்னைப்போல் பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட வேண்டும். அப்போதுதான் இனியாவது இதுபோன்ற பிரச்சனைகள் வராது என்று நம்பிக்கையுடன் இருக்கலாம்’’ என்கிறார் அழுத்தமாக.