இளமை துள்ளும் தாத்தாவாக வளையவந்தவர்… நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.. கமல்

 

இளமை துள்ளும் தாத்தாவாக  வளையவந்தவர்… நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.. கமல்

பழம்பெரும் நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

இளமை துள்ளும் தாத்தாவாக  வளையவந்தவர்… நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.. கமல்

உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மலையாளப்படங்களில் தாத்தா வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். 78வயதில்தான் இவர் திரைத்துறைக்கே வந்திருக்கிறார்.
மம்மும்ட்டி, அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் கமல்ஹாசன் நடித்த பம்மல் கே.சம்பந்தம் படத்திலும் நடித்துள்ளார் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி.

தற்போது 98 வயதாகும் நிலையில், உன்னிகிருஷ்ணன் நம்பூதிரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்ததால் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டது மருத்துவமனை நிர்வாகம். ஆனால், வீட்டுக்கு வந்ததும் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையிலேயே அவரின் உயிர் பிரிந்தது.

மலையாள திரையுலகில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கம்ஹாசனும், 73ஆவது வயதில் நடிக்க வந்து 18 வருடங்களாக மலையாளிகளைச் சிரிக்கவைத்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இளமை துள்ளும் தாத்தாவாகக் கலையுலகில் வளையவந்தவர். இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர் இன்று நம்மை நீங்கியிருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலிகள் என்று தெரிவித்திருக்கிறார்.

உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியின் இறுதிச்சடங்கு இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.