‘மெட்ராஸ் டே’க்கு ரஜினி, கமல், சூர்யா, த்ரிஷா என லைக்கா வழங்கிய கொண்டாட்டங்கள்!

இன்று காலையில் இருந்தே ‘மெட்ராஸ் டே’ வெகு உற்சாகமாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில்  சினிமா ரசிகர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று தங்களது அபிமான சென்னை சினிமா நட்சத்திரங்களின் பழைய புகைப்படங்களி வெளியிட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா, சமூக வலைத்தளங்களில் ‘மெட்ராஸ் டே’ ஸ்பெஷலாக தனது நிறுவனத்தின் தயாரிப்புகளான ‘தர்பார்’, ‘இந்தியன் 2’, ‘காப்பான்’, ‘மாஃபியா’, ‘ராங்கி’ போன்ற படங்களின் புகைப்படங்களை வெளியிட்டு, ‘நமக்கு அபிமான நட்சத்திரங்களை வழங்கிய நமது தலைநகரம் மெட்ராஸுக்கு 380வது பிறந்தநாள் வாழ்த்துகள்! சென்னை என்பது ஓர் பெயர்… மெட்ராஸ் என்பது ஓர் உணர்வு’ என்று வெளியிட்டிருக்கிறார்கள். 

லைக்காவின் தயாரிப்பான ‘காப்பான்’ படம் அடுத்த மாதம் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், லைக்காவின் இந்த ‘ மெட்ராஸ் டே’ வாழ்த்துகளை சினிமா ரசிகர்கள் மிகவும் ரசித்து ஷேர் செய்து வருகிறார்கள்.