காலேஜ் குமாருக்கு வாழ்த்து கூறிய நடிகர் தனுஷ்

 

காலேஜ் குமாருக்கு வாழ்த்து கூறிய நடிகர் தனுஷ்

ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்களும்’ என்று பதிவிட்டுள்ளார்.

கன்னட இயக்குநர்   ஹரி சந்தோஷ் இயக்கிய காலேஜ் குமாரா படத்தின் தமிழ் ரீமேக்கான  காலேஜ் குமார்   படத்தில் அறிமுக நடிகர் ராகுல் விஜய் மற்றும் நடிகை பிரியா வட்லமணி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

ttn

இப்படத்தின் மூலம்  இயக்குநர்   ஹரி சந்தோஷ்  தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தில் நடிகர் பிரபு மற்றும்  நடிகை மதுபாலா நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமானின் மாணவர்கள் இசையமைத்துள்ளனர்.  

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில்,  காலேஜ் குமார் படத்தின் இசையை வெளியிட்டதுடன், எனது அன்பான மற்றும் இனிமையான பிரபு சார்  மற்றும் அவரது ‘காலேஜ்  குமார்’ அணிக்கு வாழ்த்துக்கள். இது  ஏ.ஆர்.ஆர் மியூசிக் பள்ளி மாணவர்களின் இசை…ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்களும்’ என்று பதிவிட்டுள்ளார்.