அடுத்த வருடம் தமன்னாவுக்கு டும் டும் டும்! மாப்பிள்ளை யாரு தெரியுமா?

 

அடுத்த வருடம் தமன்னாவுக்கு டும் டும் டும்! மாப்பிள்ளை யாரு தெரியுமா?

நடிகை தமன்னா தனது திருமணம் குறித்து முதல் முறையாக வாய்திறந்துள்ளார். 

அடுத்த வருடம் தமன்னாவுக்கு டும் டும் டும்! மாப்பிள்ளை யாரு தெரியுமா?

சென்னை: நடிகை தமன்னா தனது திருமணம் குறித்து முதல் முறையாக வாய்திறந்துள்ளார். 

நடிகை தமன்னா  தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கார்த்தி, சூர்யா, விஷால், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துப் பிரபலமானார். அதைத்தொடர்ந்து பாலிவுட், கன்னடா, தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துவருகிறார். 

இந்த நிலையில், தமன்னா ஒருவரைக் காதலித்து வருவதாகவும் விரைவில் அவரையே திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும்  சில செய்திகள் உலவி வந்தன. ஆனால் அது எல்லாம் கட்டுக்கதை என்று தமன்னா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

அதைத்தொடர்ந்து இவரது ரசிகர்கள் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். தற்போது அவர் ரசிகர்களுக்காகத் தனது திருமணம் குறித்த தகவல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது, ‘எனக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. ஆனால் அது காதல் கல்யாணம் இல்லை. பெற்றோர்கள் பார்க்கும் நபரைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். எனக்கு ஏற்ற மணமகன் கிடைத்தவுடன் திருமணம் கொள்ளப்போகிறேன். அனேகமாக அடுத்த வருடத்திற்குள் நடந்து முடிந்து விடும் என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதன் மூலம் தமன்னா இன்னும் சிங்கிளாக தான் இருக்கிறார் என்பது வெட்டவெளிச்சமாக வெளியே வந்துள்ளது.