தொற்றுநோயால் ரூ.5 லட்சம் கோடியை இழந்த இந்திய சுற்றுலா துறை… மோடியின் பொருளாதார கனவு சிதைகிறதா?

தொற்றுநோயால் ரூ.5 லட்சம் கோடியை இழந்த இந்திய சுற்றுலா துறை… மோடியின் பொருளாதார கனவு சிதைகிறதா?

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலால் இந்திய பயண மற்றும் சுற்றுலா துறைக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கும் என அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்திய தொழிலக கூட்டமைப்பு மற்றும் விருந்தோம்பல் ஆலோசனை நிறுவனமான ஹோட்டல்வேவும் இணைந்து இந்திய பயண மற்றும் சுற்றுலா துறையில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் பாதிப்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. தற்போது அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்று இந்திய பயண மற்றும் சுற்றுலாத் துறைக்கு ஒரு மோசமான அடியை கொடுத்துள்ளது.

தொற்றுநோயால் ரூ.5 லட்சம் கோடியை இழந்த இந்திய சுற்றுலா துறை… மோடியின் பொருளாதார கனவு சிதைகிறதா?
சுற்றுலா துறை

மேலும், இந்த துறையுடன் சம்பந்தப்பட்ட முழு சங்கிலியும் சுமார் சுமார் ரூ.5 லட்சம் கோடி இழப்பை சந்தித்து இருக்கலாம். இந்த துறையில் அமைப்புசார்ந்த நிறுவனங்கள் மட்டும் சுமார் ரூ.2 லட்சம் கோடி இழப்பை சந்தித்து இருக்கலாம். இந்திய பயண மற்றும் சுற்றுலா துறை நொடிந்து விடாமல் தடுக்க உடனடி நடவடிக்கைகள் தேவை என்பதை இந்த புள்ளிவிவரங்கள் எச்சரிக்கை மணியாக தெரிவிக்கின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயால் ரூ.5 லட்சம் கோடியை இழந்த இந்திய சுற்றுலா துறை… மோடியின் பொருளாதார கனவு சிதைகிறதா?
பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 5 ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் உயர்த்துவோம் என கூறினார். ஆனால் கொரோனா வைரஸால் நிலவரத்தால் ஏற்கனவே தடுமாறி கொண்டு இருந்த பொருளாதாரம் தற்போது பலத்த அடிவாங்கியுள்ளது. இந்திய பயண மற்றும் சுற்றுலா துறை ரூ.5 லட்சம் கோடி இழப்பை சந்திக்கும் என்ற புள்ளிவிவரமே அதற்கு சாட்சி. இதனால் மோடியின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார பலம் என்ற கனவை குறிப்பிட்ட காலத்துக்குள் எட்டுவது கடினம் என தெரிகிறது.