’மகனுக்கே அபாரதம் விதித்த கிறிஸ் பிராட்’ இங்கிலாந்து கிரிக்கெட்டின் விநோதம்!

’மகனுக்கே அபாரதம் விதித்த கிறிஸ் பிராட்’ இங்கிலாந்து கிரிக்கெட்டின் விநோதம்!

பாகிஸ்தான் – இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இத்தொடரில் மொத்தம் 3 போட்டிகள். அவற்றில் முடிவடைந்த ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. ஆனால், இறுதிவரை பாகிஸ்தான் அணியே வெல்லும் என எதிர்பார்த்த நிலையில் மேட்சில் திருப்பம் ஏற்பட்டு வெற்றியைச் சுவைத்தது இங்கிலாங்து.

’மகனுக்கே அபாரதம் விதித்த கிறிஸ் பிராட்’ இங்கிலாந்து கிரிக்கெட்டின் விநோதம்!

இந்த வெற்றியின் மூலம், 1:0 எனும் கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிற்து இங்கிலாந்து அணி. அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சொந்தக் காரணங்களால் அணியிலிருந்து விலகியிருக்கிறார். முதல் போட்டியில் சரியாக விளையாட ஸ்டோக்ஸ் அடுத்த போட்டியில் கலக்குவார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அவர் விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவே.

’மகனுக்கே அபாரதம் விதித்த கிறிஸ் பிராட்’ இங்கிலாந்து கிரிக்கெட்டின் விநோதம்!

முதல் போட்டியின் போது பாகிஸ்தானின் பேட்ஸ்மேனின் விக்கெட்டை எடுத்தார் ஸ்டுவர்ட் பிராட். ஆனால், அதைக் கொண்டாடும் விதமாக அவர் நடந்துகொண்டது ஒழுக்க விதிகளுக்கு எதிராக இருந்தது. அதனால், அந்தப் போட்டியின் அம்ப்பயர் கிறிஸ்ட் பிராட், ஸ்டுவர்ட் பிராட்க்கு 15 சதவிகித சம்பளத்தை அபராதமாக விதித்தார்.

’மகனுக்கே அபாரதம் விதித்த கிறிஸ் பிராட்’ இங்கிலாந்து கிரிக்கெட்டின் விநோதம்!

இதில் என்ன விநோதம் எனில், ஸ்டூவர்ட் பிராட்டின் அப்பாதான் கிறிஸ்ட் பிராட். மகனாகவே இருந்தாலும் விதிகளை மீற மாட்டேன். தான் ரொம்ப ஸ்ட்ரிட்டான  அப்பா என நிருபித்திருக்கிறார் கிறிஸ்ட் பிராட். ஸ்டூவர்ட் பிராட்-வும் தன் தவற்றை ஏற்றுக்கொண்டு அபராதம் கட்ட ஒத்துக்கொண்டிருக்கிறார்.

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாம் போட்டி நாளை (ஆகஸ்ட் 13) தொடங்குகிறது.