நடிகர் சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

 

நடிகர் சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேம்நாத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது என ஹேம்நாத்தின் நண்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஓட்டல் அறையில் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு தொழிலதிபர் ஹேமந்துடன் பதிவு திருமணம் நடந்த நிலையில் திருமணமாகி இரண்டே மாதத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேமந்த்தை கைது செய்தது நசரத்பேட்டை போலீஸ். 6 நாட்களாக விசாரணை நடந்த நிலையில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

நடிகர் சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

இந்நிலையில் காஞ்சிபுரம் புதுப்பாக்கத்தை சேர்ந்த சையது ரோஹித் என்பவர் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஹேம்நாத் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணம் பறித்து வந்தார். சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருடன் சித்ரா காதல் காட்சிகள் நடிக்க எதிர்ப்பு காட்டினார். இருவர் குறித்தும் அனைத்து தகவல்களும் தெரிந்த தன்னை இதுவரை போலீசார் விசாரணைக்கு அழைக்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹேம்நாத்தின் ஜாமீன் வழக்கின் விசாரணை ஜனவரி 21ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.