ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி – பெண் உள்பட மூவருக்கு வலை!

 

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி – பெண் உள்பட மூவருக்கு வலை!

கோவை

கோவை அருகே ஏலச்சீட்டு நடத்தி வாடிக்கையாளர்களிடம் 10 லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறனர்.

கோவை மாவட்டம் போத்தனூர் காந்திஜி சாலை பகுதியை சேர்ந்தவர் ஶ்ரீரங்க பெருமாள். இவர் நேற்று போத்தனூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கோவை வெள்ளலூர் சித்தணபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் பத்மநாபன், கோமதி ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும், அவர்களிடம் தான் உள்பட 10 பேர் சீட்டு கட்டி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி – பெண் உள்பட மூவருக்கு வலை!

சுமார் 10 லட்சம் ரூபாய் பணம் கட்டிய நிலையில், சீட்டு முடிவடைந்தும் மகேந்திரன் பணத்தை கொடுக்க வில்லை. இதனால் மகேந்திரனிடம் கேட்டபோது, பணத்தை பிறகு தருவதாக கூறி தாமதித்து வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த, ஶ்ரீரங்க பெருமாள், மகேந்திரன் உள்ளிட்ட மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் பாதிக்கப்பட்ட நபர்களிம் விசாரணை மேற்கொண்டனர். அதில், 10 பேரிடம் பணத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போத்தனூர் போலீசார், தலைமறைவாக உள்ள அவர்களை தீவிரமாக தேடி வருகின்றர்.