தேஜஸ்வி யாதவ் முன்பும் குனிவார்… அதிகாரத்தின் மீது அன்பு, பேராசை… நிதிஷ் குமாரை சாடிய சிராக் பஸ்வான்

தேஜஸ்வி யாதவ் முன்பும் குனிவார்… அதிகாரத்தின் மீது அன்பு, பேராசை… நிதிஷ் குமாரை சாடிய சிராக் பஸ்வான்

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு அதிகாரத்தின் மீது அன்பு மற்றும் பேராசை உள்ளது. அதனால் தேவைப்பட்டால் தேஜஸ்வி யாதவ் முன்பும் குனிவதை பார்க்கலாம் என்று அவரை சிராக் பஸ்வான் கடுமையாக தாக்கினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜன்சக்தி கட்சி, முதல்வர் நிதிஷ் குமாருடான மோதல் காரணமாக கூட்டணியிலிருந்து வெளியேறியது. பீகார் சட்டப்பேரவை தேர்தலில் லோக் ஜன்சக்தி தனித்து போட்டியிடுகிறது. பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல், நிதிஷ் குமார் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் லோக் ஜன்சக்தி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. மேலும், சிராக் பஸ்வான் நிதிஷ் குமாரை குறிவைத்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

தேஜஸ்வி யாதவ் முன்பும் குனிவார்… அதிகாரத்தின் மீது அன்பு, பேராசை… நிதிஷ் குமாரை சாடிய சிராக் பஸ்வான்
சிராக் பஸ்வான்

சிராக் பஸ்வான் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: நீங்கள் (நிதிஷ் குமார்) முன்பு அப்பட்டமாக விமர்சித்த அதே பிரதமரின் முன் இப்போது குனிந்து கொண்டிருக்கிறீர்கள். இது அதிகாரத்தின் மீதான உங்கள் அன்பு மற்றும் பேராசையும் காட்டுகிறது. நவம்பர் 10ம் தேதிக்கு பிறகு தேவைப்பட்டால் தேஜஸ்வி யாதவ் முன்பும் அவர் குனிந்து இருப்பதை காணலாம். மது தடை குறித்து விசாரணை நடத்தப்பட்டால் நிதிஷ் குமார் சிறையில் இருப்பார்.

தேஜஸ்வி யாதவ் முன்பும் குனிவார்… அதிகாரத்தின் மீது அன்பு, பேராசை… நிதிஷ் குமாரை சாடிய சிராக் பஸ்வான்
தேஜஸ்வி யாதவ்

மது விற்பனையால் உருவாகும் கருப்பு பணம் எங்கே போகிறது? என்பதற்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும். நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசப்பட்டதை நாங்கள் ஆதரிக்கவில்லை. பொதுமக்கள் அவரிடம் கேள்வியை கேட்கும்போதெல்லாம் அவர் தொடர்ந்து எறியுங்கள், தூக்கி எறியுங்கள் என்று கூறுகிறார். பீகாரிலிருந்து மக்கள் புலம்பெயருவதை தடுக்க நிதிஷ் குமாருக்கு வாக்களிக்க கூடாது என்பது முக்கியம். ஐக்கிய ஜனதா தளத்துக்கு அளிக்கும் ஒரு வாக்கும் பீகாரை அழிவுக்கு தள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.