ராம் விலாஸ் பஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை…. அவசியம் என்றால் மேலும் ஒரு அறுவை சிகிச்சை.. சிராக் பஸ்வான் தகவல்

ராம் விலாஸ் பஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை…. அவசியம் என்றால் மேலும் ஒரு அறுவை சிகிச்சை.. சிராக் பஸ்வான் தகவல்

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் வரும் வாரங்களில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படும் என அவரது மகன் சிராக் பஸ்வான் தகவல் தெரிவித்தார்.

நிதிஷ் குமார் தலைமையில் பீகார் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க லோக் ஜனசக்தி கட்சியின் பல தலைவர்கள் விரும்பவில்லை. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க அந்த கட்சியின் உயர்மட்ட குழுவின் சந்திப்பு நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. ஆனால் அன்று ராம் விலாஸ் பஸ்வானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் நேற்று முன்தினம் நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ராம் விலாஸ் பஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை…. அவசியம் என்றால் மேலும் ஒரு அறுவை சிகிச்சை.. சிராக் பஸ்வான் தகவல்
ராம் விலாஸ் பஸ்வான்

டெல்லி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு ராம் விலாஸ் பஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தியின் தலைவருமான சிராக் பஸ்வான் டிவிட்டரில், கடந்த பல நாட்களாக அப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அன்று இரவு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ராம் விலாஸ் பஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை…. அவசியம் என்றால் மேலும் ஒரு அறுவை சிகிச்சை.. சிராக் பஸ்வான் தகவல்
சிராக் பஸ்வான்

தேவைப்பட்டால் அடுத்த சில வாரங்களிலும் மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.இந்த கடினமான நேரத்தில் என்னுடன் மற்றும் எனது குடும்பத்தினருடன் நின்ற அனைவருக்கும் நன்றி என பதிவு செய்து இருந்தார். பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து ராம் விலாஸ் பஸ்வான்தான் இறுதி முடிவு எடுப்பார் என்று அந்த கட்சியில் தெரிவித்து இருந்த நிலையில், நேற்று மாலை பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக லோக் ஜனசக்தி அறிவித்துள்ளது.