பெயர் இல்லாத விரோதி யார்… சீனா பெயரைக் குறிப்பிட மோடி மறுக்கும் மர்மம் என்ன? – ப.சிதம்பரம் கேள்வி

 

பெயர் இல்லாத விரோதி யார்… சீனா பெயரைக் குறிப்பிட மோடி மறுக்கும் மர்மம் என்ன? – ப.சிதம்பரம் கேள்வி

சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் மோடி தொடர்ந்து சொற்பொழிவாற்றி வருவதன் மர்மம் என்ன என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடி நேற்று திடீரென்று லடாக் சென்று அங்கு ராணுவத்தினர் மத்தியில் பேசினார். பின்னர், சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடினார்.

பெயர் இல்லாத விரோதி யார்… சீனா பெயரைக் குறிப்பிட மோடி மறுக்கும் மர்மம் என்ன? – ப.சிதம்பரம் கேள்விஇது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டர் இந்தி, தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் பல ட்வீட்களை வெளியிட்டு கேள்வி எழுப்பி வருகிறார்.
அதில், “முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா?

பெயர் இல்லாத விரோதி யார்… சீனா பெயரைக் குறிப்பிட மோடி மறுக்கும் மர்மம் என்ன? – ப.சிதம்பரம் கேள்விஇந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா?
பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்?

http://


ஒரு வாரத்தில் 3வது முறையாக சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் மோடி பேசியது ஏன்? லடாக்கின் பெயர் இல்லாத விரோதி பற்றி இந்திய மக்களிடமும் ஜவான்களிடமும் பேச வேண்டிய நோக்கம் என்ன?

http://


ட்ரம்ப், புதின் ஆகியோரிடம் பிரதமர் மோடி பேசும்போது சீன ஊடுருவுகிறது என்று குறிப்பிட்டாரா இல்லையா? எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
இந்திய – சீன வீரர்களுக்கு இடையே ஜூன 15-16ம் தேதி நடந்த மோதல் தொடர்பாக இதுவரை மோடி விளக்கம் அளிக்காமல் உள்ளார். சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததா இல்லையா?” என்று கூறியுள்ளார்.