சீன கந்து வட்டி செயலி வழக்கு – அமலாக்கத்துறை தீவிர விசாரணை!

 

சீன கந்து வட்டி செயலி வழக்கு – அமலாக்கத்துறை தீவிர விசாரணை!

ஆன்லைனில் கடன் கொடுத்து டார்ச்சர் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், வழக்கு விசாரணை அமலாக்கத்துறை வசம் மாறியுள்ளது.

செல்போன் செயலி மூலம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, கடனை திரும்ப செலுத்த தவறியவர்களை அவமானபடுத்தி பணத்தை திரும்பக் கேட்பதாக புகார் ஒன்று எழுந்தது. வழக்கின் தீவிரத்தை உணர்ந்த போலீசார், அந்த செயலி மூலம் கடன் கொடுத்து வந்த 4 பேரை சென்னையில் கைது செய்தனர். அவர்களுள் 2 பேர் கால் சென்டர் நடத்தி வருவதாக தெரிய வந்த நிலையில், மற்ற 2 பேர் சீனர்கள் என்று தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 6 மொபைல், 2 சீனா பாஸ்போர்ட், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சீன கந்து வட்டி செயலி வழக்கு – அமலாக்கத்துறை தீவிர விசாரணை!

அண்மையில், ஆன்லைனில் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்த சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு அடுத்தடுத்த புகார்கள் எழுந்ததால், ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கருத்து வெகுவாக எழுந்தது. இந்த விவகாரத்தில், 2 சீனர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்று அமலாக்கத் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. சட்டவிரோதமாக கடன் செயலியின் மூலம் வெளிநாடுகளுக்கு பணம் கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.