லடாக் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை: இந்திய ராணுவம் விளக்கம்!

 

லடாக் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை: இந்திய ராணுவம் விளக்கம்!

இந்திய-சீன எல்லையான லடாக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

அண்மையில் இந்திய சீன எல்லையான லடாக்கில், சீனப்படை அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். அந்த தாக்குதல் நடந்ததில் இருந்தே லடாக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்னை பேசி தீர்க்க முடிவெடுத்த இந்திய ராணுவம், சீன ராணுவத்துடன் ஒப்பந்தம் போட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் பாங்கோங் ஏரி பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியது.

லடாக் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை: இந்திய ராணுவம் விளக்கம்!

இதனைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சீனப்படை தான் அத்துமீறுவதாகவும் இந்தியப்படை பாதுகாப்பை நிலைநிறுத்த முயன்று சீனப்படையை விரட்டி அடித்ததாகவும் எல்லையை மீறக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சீன ராணுவ செய்தி தொடர்பாளர், லாடக் எல்லையைத் தாண்டி பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில் இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. லாடாக்கில் இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளது.