டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு அமெரிக்காவிலும் தடையா?

 

டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு அமெரிக்காவிலும் தடையா?

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.

டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு அமெரிக்காவிலும் தடையா?

இந்த தாக்குதலை தொடர்ந்து சீனாவின் டிக் டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இது சீனா மீதான டிஜிட்டல் தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தடையால் சீனாவிற்கு ₹45,000 கோடி வருமானம் இழப்பீடு ஏற்படும் என்று இதற்கு கண்டனம் தெரிவித்து சீன ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு அடுத்த படியாகச் சீன செயலிகளை அதிகமாக உபயோகிக்கும் அமெரிக்கா, சீன செயலிகளுக்குத் தடை விதிக்க பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.