‘குழந்தைகளிடம் கோவாக்சின் தடுப்பூசியை பரிசோதிக்கலாம்’!

 

‘குழந்தைகளிடம் கோவாக்சின் தடுப்பூசியை பரிசோதிக்கலாம்’!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் சூழலில் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பு ஊசி தான் ஒரே வழி என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது. இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் தற்போதைய சூழலில், மக்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் செலுத்துகிறார்கள். தற்போது 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

‘குழந்தைகளிடம் கோவாக்சின் தடுப்பூசியை பரிசோதிக்கலாம்’!

இந்த நிலையில், 2 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான கோரிக்கையை எஸ்இசி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் முன்வைத்திருந்தது. அதன் படி, தற்போது குழந்தைகளிடம் 2 மற்றும் 3-வது கட்ட சோதனைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும் 525 குழந்தைகளிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது. மேலும், முதல் டோஸ் செலுத்தப்பட்ட பிறகு 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.