குழந்தைகளை விட்டு திருடும் கூட்டம் -பேங்கில் சிக்கிய சிசிடிவி கேமெரா காட்சி-அதிர்ந்த போலீஸ்

 

குழந்தைகளை விட்டு திருடும் கூட்டம் -பேங்கில் சிக்கிய சிசிடிவி கேமெரா காட்சி-அதிர்ந்த போலீஸ்

 ஒரு வங்கியில் பணம் எடுத்து சென்றவரின் பையிலிருந்து ஒரு குழந்தையை விட்டு பணம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

குழந்தைகளை விட்டு திருடும் கூட்டம் -பேங்கில் சிக்கிய சிசிடிவி கேமெரா காட்சி-அதிர்ந்த போலீஸ்

உத்திர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள  மவானா நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கடந்த வாரம் புதன்கிழமையன்று ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆஸ் முகமது என்பவர் வந்தார் .அவர் பெஹ்சுமா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்பர்பூர் சதாத்தில் வசித்து வருகிறார்.இந்நிலையில் அவர் தன்னிடமுள்ள 50000 ரூபாய் பணத்தை அந்த வங்கியில் கட்டுவதற்காக வந்தார் .அப்போது அந்த வங்கியிலிருந்த ஒரு குழந்தையொன்று அவரின் அருகே விளையாடியது .

அதை அவர் பொருட்படுத்தவில்லை .பின்னர் அந்த வங்கியின் கேஷியரிடம் அவர் பணம் கட்ட சென்ற போது அவரின் பையிலிருந்த 50000 பணத்தை காணவில்லை .அதை  கன்டு அவர் திடுக்கிட்டார் .பின்னர் அங்குள்ள காவலரிடம் அவர் புகாரளித்தார்  .அதன் பிறகு அந்த வங்கியிலிருந்த அதிகாரிகள் உதவியுடன் அந்த வங்கியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து பார்த்தனர் .அப்போது அவரின் பையிலிருந்து ஒரு குழந்தை பணத்தை எடுப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர் .பின்னர் போலீசார் அந்த குழந்தையை அனுப்பி பணத்தை திருட வைத்த நபர்களை தேடி வருகின்றனர் .இந்த சம்பவம் போலீசாரை அதிச்சியடைய  வைத்துள்ளது .கொள்ளையர்களின் இந்த  நூதன திருட்டு வழியை கண்டு அதிர்ச்சியுற்றனர் .