முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி : சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி : சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படவுள்ளார். எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் கடந்த மாதம் முதலே நீடித்து வந்தது. இதற்காக செயற்குழு கூட்டம் கூட்டப்பட்ட நிலையில் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி : சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்நிலையில் இன்று அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியை தக்கவைத்து திறம்பட செயலாற்றிய முதல்வர் பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார். இதை ஓபிஎஸ் தரப்பும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி : சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதனிடையே ஓபிஎஸ் – ஈபிஎஸ் தனித்தனியே நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பதில் தனக்கு எந்த ஆட்சேட்பனையும் இல்லை என்று கூறியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கட்சியில் தனக்கு பலமான அதிகாரம் இருக்க வேண்டும் என்று மட்டுமே தான் நினைப்பதாகவும், முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்றும் கூறினாராம் ஓபிஎஸ்.

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி : சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் காலை 10 மணியளவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர். அதில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஓ. பன்னீர் செல்வமே அறிவிக்கவுள்ளார். அதேபோல் ஓபிஎஸ் கோரிக்கையின் படி வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்படவுள்ளது. அதில் ஓபிஎஸ் தரப்பில் 5 பேர், ஈபிஎஸ் தரப்பில் 6 பேர் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.