சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்… ஸ்டெர்லைட் ஆலைக்கு கரண்ட் கட்… குடிநீர் கட்!

 

சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்… ஸ்டெர்லைட் ஆலைக்கு கரண்ட் கட்… குடிநீர் கட்!

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அப்போதைய அதிமுக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்க முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இதில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்… ஸ்டெர்லைட் ஆலைக்கு கரண்ட் கட்… குடிநீர் கட்!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கலாம் என திமுக தரப்பில் கூறப்பட்டது. ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தான் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அனைத்துக் கட்சி குழு அமைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டது. திமுகவின் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திமுகவும் ஸ்டெர்லைட் ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறதே என கடிந்துகொண்டனர்.

சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்… ஸ்டெர்லைட் ஆலைக்கு கரண்ட் கட்… குடிநீர் கட்!

ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆக்சிஜன் தேவைப்படாத பட்சத்தில் ஸ்டெர்லைட் மூடப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார். தற்போது அதனை செய்து காட்டியிருக்கிறார். கடந்த வாரமே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய 3 மாத அனுமதி ஜூலை 31ஆம் தேதியோடு முடிவடைந்தது. ஸ்டெர்லைட் நிறுவனம் ஜூலை 30ஆம் தேதியோடு ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்திக்கொண்டது. ஆலைக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போது மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்… ஸ்டெர்லைட் ஆலைக்கு கரண்ட் கட்… குடிநீர் கட்!

தேவையான நேரத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக தொடங்கும் வகையில், தினசரி 2 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என ஸ்டெர்லைட் நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது. ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது கவனிக்கத்தக்கது.