அயோத்திதாசருக்கு மணிமண்டபம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 

அயோத்திதாசருக்கு மணிமண்டபம்  – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று வனம், சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றம் துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 175வது விழாவையொட்டி வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதர் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.

அயோத்திதாசருக்கு மணிமண்டபம்  – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

அவரது பெருமையைப் போற்றும் விதமாக மணிமண்டபம் கட்டுவதாக தெரிவித்த முதல்வர், தமிழ்நாட்டு அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொல் இன்றி நடத்த முடியாது. தமிழர் திராவிடம் என்ற வார்த்தைகளையே ஆயுதமாக பயன்படுத்திய மொழிப் போராளி அயோத்திதாசர் பண்டிதர் என்று கூறினார். மேலும், வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் தியாக திருநாளாகவும், ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் விருது வழங்கப்படும் என்றும் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.