அண்ணா சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை!

 

அண்ணா சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை!

மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படும் அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவர். 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் நடராசன் – பங்காரு அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் அண்ணாதுரை.

அண்ணா சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக் கட்சியில் இணைந்தார். பின்னர் திராவிட கழகத்தில் இணைந்த அண்ணாதுரை 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தோற்றுவித்தார். இதையடுத்து 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுகவின் சார்பில் முதல்வராக பதவியேற்றார்.

அண்ணா சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை!

சுயமரியாதைத் திருமணம், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றியது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை அடுத்து அரசியல் வரலாற்றில் மறையாத பேரொளியாக அண்ணா திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினர். அண்ணாவின் 112வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.