வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு முதல்வர் பழனிசாமி, மு.க ஸ்டாலின் வாழ்த்து!

 

வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு முதல்வர் பழனிசாமி, மு.க ஸ்டாலின் வாழ்த்து!

ஆஸ்திரேலிய மண்ணிலேயே அவர்கள் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு முதல்வர் பழனிசாமி, மு.க ஸ்டாலின் வாழ்த்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி, வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவை வெல்ல முடியாது என்ற கூறியவர்களுக்கு தக்க பதிலடி கூறும் விதமாக, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்தியா. இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் சுந்தர் பிச்சை, அமித்ஷா, மோடி, கங்குலி உள்ளிட்ட பலர் இந்திய அணிக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் பழனிசாமியும், மு.க ஸ்டாலினும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு முதல்வர் பழனிசாமி, மு.க ஸ்டாலின் வாழ்த்து!

முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது’ என்று பதிவிட்டு கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், நடராஜன், சுந்தர் ஆகியோரை டேக் செய்திருக்கிறார்.

மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலியாவில் அருமையான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் ஒவ்வொரு வீரரும் சிறப்பாக பங்களிப்பு செய்ததாலும், ஒன்று பட செயல்பட்டதாலும் இந்த வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது. எங்கள் இளம் வீரர்களின் அற்புதமான செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.