யோகி ஆதித்யநாத் அரசு குற்ற விவரங்களை மறைக்க முயற்சி செய்கிறது…. பிரியங்கா காந்தி தாக்கு….

யோகி ஆதித்யநாத் அரசு குற்ற விவரங்களை மறைக்க முயற்சி செய்கிறது…. பிரியங்கா காந்தி தாக்கு….

உத்தர பிரதேசத்தில் நிகழும் கொலை சம்பவங்கள் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கி உள்ளார். பிரியங்கா காந்தி இது தொடர்பாக நேற்று டிவிட்டரில், நாட்டில் நிகழ்ந்த கொலை சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை நீங்கள் பார்த்தால், கடந்த 3 ஆண்டுகளாக கொலை சம்பவங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

யோகி ஆதித்யநாத் அரசு குற்ற விவரங்களை மறைக்க முயற்சி செய்கிறது…. பிரியங்கா காந்தி தாக்கு….

உத்தர பிரதேசத்தில் தினந்தோறும் 12 படுகொலை சம்பவங்கள் நடக்கின்றன. 2016 முதல் 2018 வரையிலான காலத்தில் மாநிலத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்துறையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் எப்போதும் இந்த விவரங்களை மறைக்க முயற்சி செய்கின்றனர். அதே தவிர அவர்கள் வேறு என்ன செய்ய முடியும்?.

யோகி ஆதித்யநாத் அரசு குற்ற விவரங்களை மறைக்க முயற்சி செய்கிறது…. பிரியங்கா காந்தி தாக்கு….

இதனால்தான் மாநிலத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர். குற்றவாளிகளுக்கு அதிகாரத்திலிருந்து பாதுகாப்பு உள்ளது மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்கள் முன் தலைகுனிகிறது. இவை அனைத்துக்கான விலையை அர்ப்பணிப்பு உள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்களால் ஏற்கப்படுகிறது என பதிவு செய்து இருந்தார். பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் டிவிட்டரில், தலித்துக்களுக்கு எதிரான மொத்த குற்றங்களில் 3ல் ஒரு பங்கை உத்தர பிரதேசம் கொண்டுள்ளது என பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.