’ரூ 512 கோடி கொரோனா நிதி பெற்றுள்ளோம். ரூ 3000 கோடி தேவை’ தமிழக முதல்வர் வலியுறுத்தல்

 

’ரூ 512 கோடி கொரோனா நிதி பெற்றுள்ளோம். ரூ 3000 கோடி தேவை’ தமிழக முதல்வர் வலியுறுத்தல்

கொரோனா நோய்த் தொற்று இந்தியாவை கடந்த மார்ச் மாதம் முதல் ஆட்டிப்படைத்து வருகிறது. லாக்டெளன், பரிசோதனை அதிகப்படுத்துதல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்தும் புதிய நோயாளிகள் அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை.

கொரோனா நோய்த்தொற்றால் மனித உயர்கள் பலியாகும் கொடுமை ஒருபுறம் எனில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும் மறுபுறம் அச்சுறுத்துக்கிறது. மத்திய மாநில அரசுகள் மக்களிடமிருந்து நிதி பெறும் திட்டங்களை அறிவித்து நிதி பெற்றும் வருகின்றன.

’ரூ 512 கோடி கொரோனா நிதி பெற்றுள்ளோம். ரூ 3000 கோடி தேவை’ தமிழக முதல்வர் வலியுறுத்தல்

இதுபோல மாநில அரசிடமிருந்து மாநில அரசுகள் நிதி கோரியிருந்தன. ஆனால், மத்திய அரசு பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு போதிய நிதியை அளிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு ஆரம்பம் முதலே இருக்கிறது. இந்நிலை பாஜகவின தமிழ்நாட்டுக்கு தந்ததாகச் சொல்லும் ஒரு தொகையை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டதாக ஏதும் குறிப்புகள் இல்லை.

இதன் உண்மை தன்மையை வெளிப்படுத்துமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசியல் செயல்பாட்டாளர்கள் கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு விடையாக நேற்று பிரதமருடன் மாநில முதல்வர்கள் கலந்துகொண்ட சந்திப்பு அமைந்திருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுடன் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

’ரூ 512 கோடி கொரோனா நிதி பெற்றுள்ளோம். ரூ 3000 கோடி தேவை’ தமிழக முதல்வர் வலியுறுத்தல்

அப்போதுபேசிய தமிழக முதல்வர், ‘தமிழ்நாட்டுக்கு கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டிருக்கும் அவசர காலத்தைச் சமாளிக்க மத்திய 712.64 கோடி ஒதுக்கியது. அதில் இரண்டு தவணைகளாக 512.64 கோடி ரூபாய் வழங்கபப்ட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதைப் போல 3000 கோடி ரூபாயாக இந்த நிதியை அதிகரித்து தர வேண்டும்.

கரோனா தடுப்புக்கான பணிகளுக்காக 9000 கோடி ரூபாய் அளித்தால் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் அதைப் பயன்படுத்த உதவியாக இருக்கும்’ என்றார்.

மேலும், மாநிலத்தின் நிலை ஜிஎஸ்டி வரி குறித்து விரிவாக பிரதமரிடம் எடுத்துக்கூறியுள்ளார் தமிழக முதல்வர்.