5 வயது சிறுவனை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

 

5 வயது சிறுவனை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

தன் புகைப்படத்தை க்யூப்ஸை கொண்டு வரைந்த சிறுவனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

5 வயது சிறுவனை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு செய்து வருகிறார். அதேபோல் அவரது தொகுதியான கொளத்தூரில் பல்வேறு குறைகளையும் உடனுக்குடன் தீர்த்து வருகிறார். அதேசமயம் சில நல்ல விஷயங்களையும் முதல்வர் ஸ்டாலின் பாராட்ட மறப்பதில்லை.

5 வயது சிறுவனை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

அந்த வகையில் கொளத்தூரை சேர்ந்த டாக்டர்.பார்த்தசாரதி – டாக்டர்.கலையரசி தம்பதியின் 5 வயது மகன் சாய் சித்தார்த் 928 கலர் க்யூப்பை கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் உருவப்படத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

5 வயது சிறுவனை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

இதனால் சிறுவன் சாய் சித்தார்த்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்ததுடன், பெரியார் சிலை ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். இந்த நிகழ்வின் போது திமுக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.