புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி பணியை தொடக்கி வைத்தார் முதல்வர்!

 

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி பணியை தொடக்கி வைத்தார் முதல்வர்!

நாடு முழுவதும் 3,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது. எல்லா இடங்களிலுமே முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொளி வாயிலாக தொடக்கி வைத்த பிரதமர் மோடி, ‘தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மிக பாதுகாப்பானவை’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி பணியை தொடக்கி வைத்தார் முதல்வர்!

பிரதமரின் உரையைத் தொடர்ந்து, எல்லா மாநிலங்களிலும் அந்தந்த முதல்வர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடக்கி வைத்தனர். தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்த அதே வேளையில், புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தடுப்பூசி போடும் பணியை தொடக்கி வைத்தார்.

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு முதலில் மருத்துவ பணியாளர் முனுசாமி என்பவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் உறுதியளித்திருக்கிறார் என்பது நினைவு கூரத்தக்கது.