தேசிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தான் முதல்வர் : எல்.முருகன் பேச்சு!

 

தேசிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தான் முதல்வர் : எல்.முருகன் பேச்சு!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. கடந்த மாதமே திமுக தேர்தல் அறிக்கைக் குழுவை நியமித்த நிலையில், தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நேற்று முக்கிய ஆலோசனை நடத்தியது. தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

தேசிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தான் முதல்வர் : எல்.முருகன் பேச்சு!

இதனிடையே சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியை அறிவித்திருக்கும் பாஜகவும் தேர்தல் அறிக்கைக் குழுவை நியமித்து விட்டது. ஹெச்.ராஜா தலைமையிலான அந்த குழுவில் வி.பி.துரைசாமி, கே.அண்ணாமலை, ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தேர்தலில் பாஜக அதிமுகவிடம் 60 முக்கிய தொகுதிகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வரும் டிச.30ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார்.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தான் முதல்வராக சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.