கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய நெல்லை செல்கிறார் முதலமைச்சர்!

 

கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய நெல்லை செல்கிறார் முதலமைச்சர்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இன்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களில் சென்றவர்கள் மூலமாக பிற மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய நெல்லை செல்கிறார் முதலமைச்சர்!

அந்த வகையில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய வரும் 7-ம் தேதி முதல்வர் பழனிசாமி நெல்லை செல்கிறார். அப்போது நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதனை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுப் பாலத்தையும் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.