யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய பெண்ணுக்கு பரிசு வழங்கிய முதல்வர்!

யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய பெண்ணுக்கு பரிசு வழங்கிய முதல்வர்!

குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற பார்வைத் திறன் குறைந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் இரண்டு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்று தலைமைச் செயலகத்தில் அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசு வழங்கி கவுரவித்தார்.

யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய பெண்ணுக்கு பரிசு வழங்கிய முதல்வர்!

யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரையைச் பூரண சுந்தரி மற்றும் சென்னையைச் சேர்ந்த பால நாகேந்திரன் என்ற இரண்டு பார்வைத்திறன் குறைவுள்ள மாறுத் திறனாளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இன்று அவர்கள் இருவரையும் தலைமைச் செயலகம் அழைத்து அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசு வழங்கி கவுரவித்தார்
அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று மக்கள் நலன் மேம்படும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அப்போது அவர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய பெண்ணுக்கு பரிசு வழங்கிய முதல்வர்!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள மேலையூர் கிராமத்தில் ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகளைக் காப்பாற்றிய ஶ்ரீதர் என்பவருக்கு 2019ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்‌ஷா என்ற விருதினை வழங்கினார்.

யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய பெண்ணுக்கு பரிசு வழங்கிய முதல்வர்!

இதைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டப் பணிகளை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். கலை பண்பாட்டுத் துறை சார்பில் மதுரை மாவட்டம் பசுமலை, தமிழ்நாடு இசைக்கல்லூரியில் 95 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் உள்ளிட்டவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.