செட்டிநாடு ஸ்பெஷல் : கந்தரப்பம் செய்வது எப்படி?

 

செட்டிநாடு ஸ்பெஷல் : கந்தரப்பம் செய்வது எப்படி?

சமையல் கலைக்கு புகழ்பெற்றது செட்டிநாடு. குறிப்பாக செட்டிநாடு பலகாரங்கள் உணவில் மிகவும் பிரபலமானது. செட்டிநாடு பலகாரங்கள் தீபாவளி பண்டிகை காலங்களிலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அதிலும் செட்டிநாடு ஸ்பெஷல் கந்தரப்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை மாலை நேர பலகாரமாக செய்து சாப்பிடலாம் . செட்டிநாடு கல்யாண விருந்தில் மட்டுமே ருசித்த கந்தரப்பத்தை வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

செட்டிநாடு ஸ்பெஷல் : கந்தரப்பம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

பச்சரிசி : 1/2 கிலோ
பாசிப் பருப்பு : 300 கிராம்
தேங்காய் : 1 மூடி
வெந்தயம் : 3 டீஸ்பூன்
வெல்லம் : 600 கிராம்
உளுந்தம் பருப்பு : 50 கிராம்
ஏலக்காய் : 8
எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை :

செட்டிநாடு ஸ்பெஷல் : கந்தரப்பம் செய்வது எப்படி?

அரிசி , பருப்பு ,வெந்தயம் ஆகியவற்றை 1 மணி நேரம் ஊறவைத்து , வெல்லம் சேர்த்து நைஸாக ஆட்ட வேண்டும். இத்துடன் துருவிய தேங்காய்பூ ,பொடித்த ஏலக்காய்ச் சேர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து கரண்டியால் மாவை ஊற்றி சிவந்த பின் எடுக்கவும்
ரெடியான கந்தரப்பத்தை சுடசுட தட்டில் வைத்து பரிமாறுங்கள்.