கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷூக்கு நெஞ்சுவலி!

கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷூக்கு நெஞ்சுவலி!

கேரள தங்க கடத்தல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் பெயரில் விமானத்தின் மூலம் பெங்களூருக்கு வந்த 30 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், போலிச்சான்று கொடுத்து கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கட்டுமான பிரிவில் அதிகாரி பணியில் சேர்ந்ததாக திருவனந்தபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷூக்கு நெஞ்சுவலி!

இந்நிலையில் கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷூக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.