7 ஆண்டுகளாக தவறான பழக்கம்… கள்ளக்காதலி திடீர் மரணம்!- சென்னை வாலிபர் எடுத்த விபரீதம்

 

7 ஆண்டுகளாக தவறான பழக்கம்… கள்ளக்காதலி திடீர் மரணம்!- சென்னை வாலிபர் எடுத்த விபரீதம்

கள்ளக்காதலி திடீரென உயிரிழந்ததால் கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். 7 ஆண்டுகளாக இவருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு தெரியவந்ததால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

7 ஆண்டுகளாக தவறான பழக்கம்… கள்ளக்காதலி திடீர் மரணம்!- சென்னை வாலிபர் எடுத்த விபரீதம்

சென்னை ஆவடி காமராஜநகரில் குடியிருந்து வந்தவர் சந்துரு. 29 வயதான இவர், அயனாவரத்தில் கடை நடத்தி வந்துள்ளார். அப்போது, அயனாவரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின மனைவி சங்கீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது தவறான பழக்கமாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக இருவருக்கும் உள்ள தொடர்பு அவர்களது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து சங்கீதாவுடன் ஏற்பட்டுள்ள தவறான பழக்கத்தை கைவிடும்படி சந்துருவிடம் அவரது குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சந்துரு, தனது குடும்பத்தைவிட்டு பிரிந்து கடந்த ஏழரை ஆண்டுகளாக தனியாக குடியிருந்து வந்தார்.

7 ஆண்டுகளாக தவறான பழக்கம்… கள்ளக்காதலி திடீர் மரணம்!- சென்னை வாலிபர் எடுத்த விபரீதம்

 

இந்தநிலையில் கடந்த 19-ம் தேதி சங்கீதா உயிரிழந்தார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட சந்துரு, மனமுடைந்ததோடு, அவரின் நினைவில் வாடியுள்ளார். இந்த நிலையில், ஆவடி காமராஜர்நகரில் உள்ள வீட்டில் சந்துரு, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி போலீஸார் சந்துருவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்துரு மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சந்துருவுக்கும் சங்கீதாவுக்கும் தவறான பழக்கம் இருந்ததை சந்துருவின் அம்மா கலைவாணி காவல் நிலையத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

7 ஆண்டுகளாக தவறான பழக்கம்… கள்ளக்காதலி திடீர் மரணம்!- சென்னை வாலிபர் எடுத்த விபரீதம்

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “சந்துருவும், சங்கீதாவுக்கு பல ஆண்டுகளாக தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை சந்துருவின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனால், இதனை சந்துரு பொறுப்படுத்தவில்லை. இந்த நிலையில், அவரது கள்ளக்காதலி சங்கீதா கடந்த 19ம் தேதி உயிரிழந்துள்ளார். இந்த வேதனையில் சந்துரு இருந்துள்ளார். சங்கீதாவின் நினைவில் தவித்த சந்துரு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேறு ஏதாவது காரணம் இருக்கிறது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று முடித்துக் கொண்டனர்.