மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்

 

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலிலும் மழைபெய்ய வாய்ப்புள்ளது. கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் கோவா, மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள், வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள் அடுத்த நான்கு நாட்களுக்கு சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அதனால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் கூடலூர் பஜார் , கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை, சோலையார் மற்றும் சின்கோனா, மதுரை மாவட்டம் புளிப்பட்டியில் 1 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஷியசாகவும் பதிவாக வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளது.