சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

 

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் இருக்கும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பருவ மழை தொடங்கவிருப்பதாலும் அவ்வப்போது கனமழை பெய்து வருவதாலும் அந்த பள்ளங்களில் நீர் நிரம்பினால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

சுமார் 6 மாத காலமாக அந்த பள்ளங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர். சரியாக, சாலை பராமரிப்புக்காக சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையிலும் அந்த பள்ளங்கள் இன்னும் சரி செய்யப்படவில்லை என குற்றஞ்சாட்டினர். அதுமட்டுமில்லாமல், அந்த பள்ளங்களால் விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், அதிகளவு வாகன விபத்துகள் ஏற்பட்ட போதிலும் பலமுறை நெடுஞ்சாலை துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பெரிய அளவில் விபத்துகள் நிகழுவதற்கு முன்னர் அதனை சரி செய்ய வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.