தோனி படைக்கு இன்னொரு வெற்றி – பஞ்சாப் தோல்வி

 

தோனி படைக்கு இன்னொரு வெற்றி – பஞ்சாப் தோல்வி

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்  முதல் போட்டிகளில் மோதும் அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்.டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மஹேந்திர சிங் தோனி, முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தார்.

தோனி படைக்கு இன்னொரு வெற்றி – பஞ்சாப் தோல்வி

கே.எல்.ராகுலும் மயங் அகர்வாலும் பஞ்சால் டீமில் ஓப்பனிங் இறங்கினார்கள். லுங்கி நிகிடி வீசிய பந்தில் போல்டானார் மய்ங் அகர்வால். அவர் எடுத்த ரன்கள் 15 பந்துகளில் 26. எட்டாவது ஓவரில், 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  நிகிடி பந்தில் அவுட்டானார் கே.எல்.ராகுல்.

தோனி படைக்கு இன்னொரு வெற்றி – பஞ்சாப் தோல்வி

அதிரடி பேட்ஸ்மேன்கள் கிறிஸ்கெயில் – பூரண் களத்தில் நிற்க, ரன்கள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பூரண் 3 ரன்களிலும் கெயில் 12 ரன்களிலும் அவுட்டாகினர். 14 ரன்களில் மந்தீப் சிங் அவுட்டானார். அவர் விக்கெட்டை வீழ்த்தியது ஜடேஜா. நீஷமும் 2 ரன்களில் திரும்பினார்.  இறுதியில் தீபக் ஹோடா 30 பந்துகளில் 62 ரன்களை விளாசியதும், பஞ்சாப் அணி பெரும் சரிவிலிருந்து மீண்டது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 153ரன்களே எடுத்திருந்திருந்தது.

தோனி படைக்கு இன்னொரு வெற்றி – பஞ்சாப் தோல்வி

154 எனும் வெற்றி இலக்கோடு டூ பிளஸியும் ருத்ராஜ் கெய்க்வாட்டும் இறங்கினர். இருவருமே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 9.5 ஓவரில் கிறிஸ் ஜோர்டன் வீசிய பந்தில் கீப்பர் ராகுலிடன் கேட்ச் கொடுத்து அவுட்டானர் டூ பிளஸி அப்போது அவர் 48 ரன்களை எடுத்திருந்தார். அடுத்து இறங்கியவர் அம்பத்தி ராயுடு.

தோனி படைக்கு இன்னொரு வெற்றி – பஞ்சாப் தோல்வி

ருத்ராஜ் இந்தப் போட்டியிலும் அரை சதம் விளாசினார். 49 பந்துகளில் 62 ரன்கள் குவித்த ருத்ராஜ் இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை. 18.4 ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை ருசித்தது.

சென்னையின் இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது சிக்கலாகியுள்ளது. மற்ற அணிகளின் முடிவுகளே பஞ்சாப் முடிவைச் சொல்லும்.