காலை வாரிய முக்கிய வீரர்… வேக புயலை தட்டித் தூக்கிய சிஎஸ்கே… தோனியின் ஸ்மார்ட் மூவ்!

காலை வாரிய முக்கிய வீரர்… வேக புயலை தட்டித் தூக்கிய சிஎஸ்கே… தோனியின் ஸ்மார்ட் மூவ்!

ஐபிஎல் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் உள்ளூர் வீரர்களுக்கும் வெளிநாட்டு வீரர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் பலருக்கு பயம் தொற்றிக்கொண்டது. கூடவே பயோ பப்பிள் விதி வேறு இருப்பதால் அலறியடித்து சொந்த நாட்டுக்கு ஓடிவிட்டனர். சிஎஸ்கே அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான ஹாசில்வுட்டும் அவர்களில் ஒருவர். அணிக்குப் பெரும்பலமாக இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டார்.

காலை வாரிய முக்கிய வீரர்… வேக புயலை தட்டித் தூக்கிய சிஎஸ்கே… தோனியின் ஸ்மார்ட் மூவ்!
காலை வாரிய முக்கிய வீரர்… வேக புயலை தட்டித் தூக்கிய சிஎஸ்கே… தோனியின் ஸ்மார்ட் மூவ்!

அவருக்குப் பதிலாக மாற்று வேகப்பந்துவீச்சாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அணி நிர்வாகம் தள்ளப்பட்டது. இங்கிலாந்தின் மார்க் வுட் உள்ளிட்ட வீரர்களைக் கேட்டதற்கு, கொரோனா அச்சம் காரணமாக அவர்கள் யாரும் ஒப்பந்தம் மேற்கொள்ள முன்வரவில்லை.

இச்சூழலில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் என்பவரை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது. சுவாரசியமான தகவல் என்னவென்றால் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக தான் மும்பை அணிக்காக அறிமுகம் ஆனார். அப்போதே அம்பாத்தி ராயுடுவை டக் அவுட் செய்து மிரளவைத்தார்.

காலை வாரிய முக்கிய வீரர்… வேக புயலை தட்டித் தூக்கிய சிஎஸ்கே… தோனியின் ஸ்மார்ட் மூவ்!

இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர், மணிக்கு 140 கிமீ வரை பந்துவீசக் கூடியவர். 30 வயதாகும் பெஹ்ரெண்டோர்ஃப் ஆஸ்திரேலிய அணிக்காக 11 ஒருநாள் போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளையும் 7 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் மொத்தமாக 5 போட்டிகள் 5 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். இவரது உயரமும் பந்து வீசும் வேகமும் பந்தை நன்றாக பவுன்ஸ் செய்ய உதவுகின்றன. இடது கை பந்துவீச்சாளர் என்பதாலும் சிஎஸ்கே அணிக்கு நிச்சயம் கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.