உயர்கல்வி படிக்க சென்ற சென்னை மாணவி லண்டனில் கடத்தல்…. தீவிரவாத கும்பல் கைவரிசை!- விசாரணையை தீவிரப்படுத்தும் என்ஐஏ

 

உயர்கல்வி படிக்க சென்ற சென்னை மாணவி லண்டனில் கடத்தல்…. தீவிரவாத கும்பல் கைவரிசை!- விசாரணையை தீவிரப்படுத்தும் என்ஐஏ

லண்டனுக்கு உயர் கல்வி படிக்க சென்ற சென்னை மாணவி தீவிரவாத கும்பலால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரத்தை சேர்ந்த தொழிலதிபரின் மகள் ஷாலினி (பெயர் மாற்றம்). இவர் லண்டனில் உயர் கல்வி படித்து வருகிறார். இந்த நிலையில், தனது மகள் லண்டனில் கடந்த 28ம் தேதி கடத்தப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அதில், தனது மகளை கடத்தல் கும்பல் கடத்தியிருப்பதாக கூறியிருந்தார். இது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, மாணவி கடத்தலில் சர்வதேச தீவிரவாத கும்பலுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் இருந்து இந்த வழக்கு என்ஐஏவுக்கு கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி மாற்றப்பட்டது. இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. வங்கதேசத்தை சேர்ந்த நஃபீஸ் என்பவர் தீவிரவாத கும்பலுடன் சேர்ந்து மாணவியை கடத்தியதும், மத மாற்றம் செய்ததும் தெரியவந்தது. நஃபீஸூக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த நஃபீஸ் அரசியல்வாதியின் மகன் என்பதும் தெரியவந்தது. பணம் பறிக்க மாணவி கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணத்துக்காக கடத்தப்பட்டாரா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.