எஸ்.வி.சேகர் மீது வழக்கு… நிபுணர்களுடன் ஆலோசனை! – கமிஷனர் பேட்டி

எஸ்.வி.சேகர் மீது வழக்கு… நிபுணர்களுடன் ஆலோசனை! – கமிஷனர் பேட்டி

எஸ்.வி.சேகர் அவதூறாக பேசியது தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்து கேட்டறிந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

எஸ்.வி.சேகர் மீது வழக்கு… நிபுணர்களுடன் ஆலோசனை! – கமிஷனர் பேட்டி
நடிகர் எஸ்.வி.சேகர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகவும் மற்றும் தேசியக் கொடியை அவமரியாதை செய்யும் வீடியோ வெளியிட்டதாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகார் அளிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இது தொடர்பாக எஸ்.வி.சேகரிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

எஸ்.வி.சேகர் மீது வழக்கு… நிபுணர்களுடன் ஆலோசனை! – கமிஷனர் பேட்டி
இந்த நிலையில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் திறந்து வைத்தார். அப்போது அவரிடம் எஸ்.வி.சேகர் மீதான புகார் குறித்த நடவடிக்கை என்ன என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தேசியக் கொடியை அவமரியாதை செய்ததாக எஸ்வி.சேகர் மீது ஆன்லைனில் புகார் கொடுத்துள்ளார்கள். இது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் கருத்துக் கேட்டுள்ளோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.