சென்னையில் வாண்டடாக கொரோனாவை வரவேற்கும் சென்னை மக்கள்! – காற்றில் பறந்த சமூக இடைவெளி

 

சென்னையில் வாண்டடாக கொரோனாவை வரவேற்கும் சென்னை மக்கள்! – காற்றில் பறந்த சமூக இடைவெளி

சென்னையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதை முறையாக மக்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சென்னையில் பரவலாக பயணம் செய்து ஆய்வு செய்தபோது பலரும் சமூக இடைவெளியின்றி கடைகளில் குவிந்திருப்பதையும் பலரும் மாஸ்க் இன்றி சர்வசாதாரணமாக திரிவதையும் பார்க்கும் போது வேதனை ஏற்படுகிறது.

சென்னையில் வாண்டடாக கொரோனாவை வரவேற்கும் சென்னை மக்கள்! – காற்றில் பறந்த சமூக இடைவெளிசென்னையில் கொரோனாத் தொற்று அதிகரிக்கவே கடந்த மாதம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில் சிறு தளர்வு கூட இன்றி ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இன்று முதல் முழு ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டது. எல்லா கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டன. காலை முதலே சந்தைகள், முக்கிய கடைத் தெருக்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சூப்பர் மார்க்கெட்களில் பலரும் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர். பல கடைகளில் நெருக்கமாக கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது.

சென்னையில் வாண்டடாக கொரோனாவை வரவேற்கும் சென்னை மக்கள்! – காற்றில் பறந்த சமூக இடைவெளிசாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வேகமாக ஓட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகாகவே உள்ளது. கார், பைக் என எல்லா வாகனங்களும் வானத்தில் பறப்பது போலவே செல்கின்றன. இதனால் பல இடங்களில் சாலைகளில் நாய்கள் அடிபட்டு இறந்து கிடப்பதைக் காண முடிந்தது.
சமூக இடைவெளி காற்றில் பறக்கிறது, மாஸ்க் அணிய மனம் இல்லை…

சென்னையில் வாண்டடாக கொரோனாவை வரவேற்கும் சென்னை மக்கள்! – காற்றில் பறந்த சமூக இடைவெளிஇதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் காவலர்கள். அரசு தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு காவல் போட்டு, சுகாதாரப் பணியாளர்களை நிறுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது. நாமும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும்! மக்கள் மனது வைக்க வேண்டும்…