ஆவின் பால் பண்ணையில் கொரோனா : மறுக்கும் ஆவின் நிர்வாகம்!

சுகாதாரத்தை பெறுவதற்காக அரசின் வழிகாட்டுதல் முழுமையாகக் கடைபிடித்து தரமான பாலை குறிப்பிட்ட நேரத்தில் பாலை அளிப்பதற்கு முழு மூச்சாக வேலை செய்துகொண்டிருக்கிறோம்.

ஆவின் நிறுவனம், மாதவரம் பால் பண்ணையில் தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா நோய் தொற்று என்பது சமூக விரோதிகள் பரப்புகின்றன பொய்யான செய்தி என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,286 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மாதவரம் பால் பண்ணையில் தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா நோய் தொற்று என்ற செய்தி பரவலாக வலம் வருகிறது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஆவின் மாதவரம் பால்பண்ணையில் பணிபுரியும் 300 பணியாளர்களுக்கு இடையே 10 நபர்களுக்கு குறைவானவர்களுக்கு நோய்தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சார்ந்தவர்களும் தனிமைப்படுத்தப் பட்டனர். பலரும் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர், மற்றவர்கள் குணமடைந்து வருகின்றனர். அதில் ஒரு நம்பர் எங்கள் ஆப்பரேட்டர் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பாகவே நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு சுகாதார பணியாளர்களும், காவல்துறை மற்றும் மருத்துவர்கள் போல முன்னணியில் நின்று நோய்க்கு எதிராகப் போர் புரிகின்ற போராளிகள் சிலர் எப்படி பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள், ஆவின் நிறுவனத்தை சார்ந்த ஒரு ஆபரேட்டர் நோய் காலத்தில் அத்தியாவசிய பொருளான பால் கொடுப்பதற்காக தன் கடமையை செய்து இறந்து விட்டார். அவருடைய இறப்பு எங்களுக்கு மிகப்பெரிய சோகத்தை கொடுத்தாலும் நாங்கள் உங்களுக்காக மனம் தளராமல் எங்களுடைய கடமையை செய்து கொண்டிருக்கிறோம். எனவே மக்களாகிய நீங்கள் உண்மையை புரிந்துகொண்டு ஆவினுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். ஆவின் நிர்வாகம் சுகாதாரத்தை பெறுவதற்காக அரசின் வழிகாட்டுதல் முழுமையாகக் கடைபிடித்து தரமான பாலை குறிப்பிட்ட நேரத்தில் பாலை அளிப்பதற்கு முழு மூச்சாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். எனவே தொழில் போட்டியாளர்கள் மற்றும் சமூக விரோதிகள் பரப்புகின்ற பொய் செய்திகளை நம்பவேண்டாம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று அன்புடன் ஆவின் நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Popular

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து!

அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். இதையொட்டி...

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக தமிழகமும், மகாராஷ்டிராவுமே அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து...

வாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்?

தலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம். பின்னர் எதற்காக...

சென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...