தொடங்குகிறதா சென்னை புறநகர் ரயில் சேவை? ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு!

 

தொடங்குகிறதா சென்னை புறநகர் ரயில் சேவை?  ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு!

சென்னை புறநகர் ரயில் சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் வரும் 1ம் தேதி முதல் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து சேவைக்கு மத்திய அரசு தடை விதித்தது. கிட்டத்தட்ட 3 மாதங்களாக நாடு தழுவிய முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், அன்லாக் செயல்பட தொடங்கிய போதும் அரசு ரயில் சேவைக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், பிற மாநிலங்களை சேர்ந்த நபர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காகவும், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிமாநிலம் செல்ல வேண்டியவர்களுக்காகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தொடங்குகிறதா சென்னை புறநகர் ரயில் சேவை?  ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு!

அதன் பிறகு தமிழகத்தில் கடந்த மாதம் 1ம் தேதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, பயணிகள் ரயில்கள் மட்டும் இயங்க முதல்வர் அனுமதி வழங்கினார். சென்னை புறநகர் ரயில் சேவையை பற்றிய எந்த அறிவிப்பும் அப்போது வெளியாகவில்லை. மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று நடத்திய ஆலோசனையில் புறநகர் ரயில் சேவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், வரும் 7ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

தொடங்குகிறதா சென்னை புறநகர் ரயில் சேவை?  ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு!

இந்த நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் வரும் 1ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ரயில் சேவை மீண்டும் தொடங்கவிருக்கிறது என்பது தெளிவாகிறது. இருந்தாலும், அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியான பிறகே, ரயில் சேவை தொடங்குவது உறுதியாகும்.